COVID-19 (நாவல் கொரோனாவைரஸ்) - வாஷிங்டன் மாகாணத்திலுள்ள தகவல்கள், சேவைகள் மற்றும் ஆதாரங்கள்

COVID-19 நேரடி தொலைபேசி: தொழிலாளர்கள், வணிகங்கள், தடுப்பூசி நியமனங்கள் மற்றும் பலவற்றிற்கான உதவி

COVID-19 பற்றி உங்களுக்கு கேள்விகள் இருந்தால் அல்லது தடுப்பூசி நியமனம் மேற்கொள்ள உதவி தேவைப்பட்டால், தயவுசெய்து 1-800-525-0127 ஐ அழைத்து # ஐ அழுத்தவும். அவர்கள் பதிலளிக்கும்போது, உரைப்பெயற்க்கும் சேவைகளை அணுக உங்கள் மொழியைக் கூறுங்கள். தினமும் நேரடி தொலைபேசி சேவை திறந்திருக்கும் மற்றும் அதன் நேரம் Department of Health’s இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது (ஆங்கிலத்தில் மட்டுமே).

வணிக மீறலைப் புகாரளிக்கவும்

ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு பொருத்தமான சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை வணிக நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும். மீறலைப் புகாரளிக்க விரும்பினால், உதவிக்கு தயவுசெய்து மேலே உள்ள COVID-19 நேரடி தொலைபேசி எண்ணை உங்கள் மொழி மூலம் அழைக்கவும். மீறல் குறித்து யாராவது ஒருவர் உங்களிடம் கேள்விகளைக் கேட்பார்கள், மேலும் உங்கள் சார்பில் புகாரை சமர்ப்பிப்பார்கள். புகாரைச் சமர்ப்பிக்க உங்கள் பெயர் அல்லது தொடர்புத் தகவலைப் பகிர வேண்டிய அவசியமில்லை.

COVID-19 மீறல் பக்கத்திலுள்ள அறிக்கையில் நீங்கள் ஆங்கிலத்தில் புகார் அளிக்கலாம்.

உங்கள் பெயர் அல்லது தொடர்புத் தகவலை நீங்கள் வழங்கினால், பொது பதிவுக்காக அந்த தகவலைக் கேட்டு யாராவது கோரிக்கைத் தாக்கல் செய்தால், அது வெளிப்படுத்தப்படலாம் என்பதை தயவுசெய்து நினைவில் கொள்க. ஆளுநரின் தனியுரிமை அறிவிப்பில் விவரிக்கப்பட்டுள்ள பதிவுகள் (ஆங்கிலத்தில் மட்டுமே) மாநில பொது பதிவுச் சட்டம், RCW 42.56 இன் கீழ் தேவைக்கேற்ப வெளியிடப்படும்.

தொழிலாளர்கள், வணிகங்கள் மற்றும் அமைப்புகளுக்கு கூடுதல் உதவி

மொழிபெயர்ப்பு சேவைகளைப் பயன்படுத்தி, நேரடி தொலைபேசி அழைப்பு உங்களை பொதுவான வழிகாட்டுதலுக்கும் ஆதரவுகளுக்கும் வழிநடத்தும். உங்களுக்கு கூடுதல் கேள்விகள் இருந்தால், COVID-19 வணிக மற்றும் பணியாளர் விசாரணை படிவத்தை நிரப்பவிபரம் அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். உங்களிடம் தொடர்புத் தகவல் கேட்கப்படும், அதன்மூலம் நீங்கள் பதிலைப் பெறலாம்.

கொரொனா வைரஸ் (Covid-19) தடுப்பு மருந்து

COVID-19 தடுப்பூசிகளைப் பற்றிய கூடுதல் தகவலுக்கு, தயவு செய்து எங்கள் COVID-19 தடுப்பூசி பக்கம் ஐப் பார்வையிடவும்

WA Notify வெளிப்பாடு அறிவிப்புகள் ஸ்மார்ட்ஃபோன் செயலி
படம்
WA NOTIFY எப்படியாக வேலை செய்கிறது

WA Notify (WA அறிவிப்பு)  அது Washington Exposure Notifications எனவும் அழைக்கப்படுகிறது) (வாஷிங்டன் நோய்ப் பாதிப்பு அறிவிப்புகள்)) இது பயனர்கள் எந்த தனிப்பட்ட தகவலையும் பகிராமல் COVID-19 பாதிப்புக்கு ஆளாகியிருந்தால் அவர்களை எச்சரிக்கை செய்வதற்கு ஸ்மார்ட்போன்களில் வேலை செய்யும் இலவச செயலி ஆகும்.   இது முற்றிலும் தனிப்பட்டது மற்றும் இதற்கு நீங்கள் யார் என்றும் தெரியாது அல்லது எங்கு செல்கிறீர்கள் என்றும் கண்காணிக்க முடியாது.

எனது தொலைபேசியில் WA Notify எப்படி இணைப்பது?

iPhone இன் அமைப்புகளில், Exposure Notifications என்பதைச் செயல்படுத்தவும்:

 • அமைப்புகளுக்குச் செல்லவும்
 • Exposure Notifications வரை உருட்டவும்
 • “இயக்கு Exposure Notifications” என்பதைக் கிளிக் செய்யவும்
 • அமெரிக்கா என்பதைத் தெரிவு செய்யவும்
 • வாஷிங்டன் என்பதை தெரிவு செய்யும்

Android தொலைபேசியில்:

ஆண்ட்ராய்டு அல்லது ஐபோனில், QR கோடை ஸ்கேன் செய்யவும்:

WA Notify QR code

அது எவ்வாறு இயங்குகிறது?

நீங்கள் WA Notify செயலியை செயல்படுத்தும் போது, தங்களுடைய தொலைபேசிகளில் WA Notify ஐ செயலியைச் செயல்படுத்தியுள்ள மற்ற மனிதர்களின் தொலைபேசிகளுடன் உங்களுடைய தொலைபேசியானது சீரற்ற, அநாமதேய குறியீடுகளைப் பரிமாறிக் கொள்கிறது. உங்களைப் பற்றிய எந்த தகவலையும் வெளிப்படுத்தாமல் இந்த சீரற்ற குறியீடுகளை பரிமாறிக்கொள்வதற்காக, இந்தச் செயலியானது இரகசியம் காக்கும் தன்மையுள்ள குறைந்த ஆற்றலுடன் இயங்கும் புளூடூத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. கடந்த இரண்டு வாரங்களில் நீங்கள் அருகில் இருந்த மற்றொரு WA Notify பயனர் கோவிட் -19 க்கு நேர்மறை சோதனை செய்யப்பட்டு, மற்றும் அநாமதேயமாக மற்றவர்களுக்கு அறிவிப்பதற்கான வழிமுறைகளைப் பின்பற்றி இருந்தால், உங்களுக்கும் நோய் வெளிப்பாடு நேரிடக்கூடிய சாத்தியம் இருப்பதாக ஒரு அநாமதேய அறிவிப்பைப் பெறுவீர்கள். இது உங்களுக்குத் தேவையான பராமரிப்பை விரைவாகப் பெறுவதற்கும், உங்களின் மூலம் கொவிட்-19 உங்களைச் சுற்றியுள்ள மனிதர்களுக்குப் பரவுவதைத் தடுப்பதற்கும் உதவும்.

உங்களுக்கு ஒரு எச்சரிக்கை அனுப்பத் தேவைப்படாதபடி பாதுகாப்பான தூரத்திலோ அல்லது குறுகிய நேரத்திலிருந்தோ COVID-19 ஐ பரப்பக்கூடிய நிகழ்வுகளை அடையாளம் காண ஒரு வழிமுறை கணிதத்தைச் செய்கிறது. WA Notify செயலியானது நீங்கள் வெளிப்படும் சாத்தியம் இருந்தால் மட்டுமே உங்களை எச்சரிக்கும். எனவே எச்சரிக்கையைப் பெறாதது நல்ல செய்தியே.

WA Notify செயலியானது 30 க்கும் மேற்பட்ட மொழிகளில் கிடைக்கிறது, அதனால் முடிந்தவரை வாஷிங்டன் குடியிருப்பாளர்கள் இந்த கருவியை அணுகலாம்.

வீட்டில் நேர்மறையான பரிசோதனை முடிவுகளை எவ்வாறு தெரிவிப்பது

கவுண்டரில் டெஸ்ட் கிட்களை வாங்கி நேர்மறையான முடிவைப் பெறுபவர்கள், முடிவைப் பெற்றவுடனே, மாநில COVID-19 ஹாட்லைன், 1-800-525-0127 எண்ணை அழைக்கவும், பின்னர் # ஐ அழுத்தவும் (ஸ்பானிஷ் மொழியில் 7 ஐ அழுத்தவும்). ஹாட்லைன் திங்கள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையும், செவ்வாய் முதல் ஞாயிறு வரை (மற்றும் விடுமுறை நாட்கள்) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கிடைக்கும். மொழி உதவி கிடைக்கிறது.

நீங்கள் அழைக்கும்போது, நீங்கள் ஒரு WA Notify(WA அறிவிப்பு) பயனர் என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். ஹாட்லைன் ஊழியர்கள் உங்களுக்கு ஒரு சரிபார்ப்பு இணைப்பை வழங்குவார்கள், அதன் மூலம் உங்களுடன் தொடர்பு கொண்ட மற்ற WA Notify பயனர்களை நீங்கள் எச்சரிக்கலாம்.

தயவுசெய்து கவனிக்கவும்: WA Notify என்பது ஒரு வெளிப்பாடு அறிவிப்பு கருவியாகும். பயனர்கள் தங்கள் சோதனை முடிவுகளை உள்ளிடுவதற்காக இது வடிவமைக்கப்படவில்லை.

உங்கள் தனியுரிமை எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது?

WA Notify உங்கள் தனியுரிமையைப் பாதுகாப்பதற்காக வடிவமைக்கப்பட்ட கூகுள் ஆப்பிள் வெளிப்பாடு அறிவிப்பு தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது. இது எந்த இருப்பிடத்தையும் அல்லது தனிப்பட்ட தரவையும் சேகரிக்கவோ வெளிப்படுத்தவோ செய்யாமல் பின்னணியில் வேலை செய்கிறது. இந்தச் செயலிக்கு நீங்கள் யார் அல்லது எங்கு வேலை செய்கிறீர்கள் என்ற தேவையில்லாமல் திறமையாக வேலை செய்கிறது.   இது ப்ளூடூத்தின் சிறிய வெடிப்புகளை மட்டுமே பயன்படுத்துவதால், உங்கள் பேட்டரிக்கும் பாதிப்பு ஏற்படாது. .

இதில் பங்கேற்பது முற்றிலும் தன்னார்வமானதாகும். பயனர்கள் எந்த நேரத்திலும் இணைவதை அல்லது வெளியேறுவதைத் தெரிவு செய்ய முடியும். பயனரின் தனியுரிமை எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது என்பது பற்றி மேலும் அறிவதற்கு, WA Exposure Notifications தனியுரிமை கொள்கை யைப் பார்க்கவும்.

அந்த அறிவிப்புகள் எப்படி இருக்கும்?

நீங்கள் பெறக்கூடிய இரண்டு வகையான அறிவிப்புகள் உள்ளன. நேர்மறை சோதனை செய்தவர்கள் சரிபார்ப்பு இணைப்பு உரை செய்தி மற்றும்/அல்லது பாப்-அப் அறிவிப்பைப் பெறுவார்கள். [WA Notify நோய் வெளிப்பாடுள்ள பயனர்கள் அந்த வெளிப்பாடு பற்றிய அறிவிப்பைப் பெறுவார்கள். . இந்த அறிவிப்புகளைப் பற்றி மேலும் அறியவும் மற்றும்  அவை எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கவும் .

அது உங்களுக்கு எப்படி உதவும்?

சமீபத்திய University of Washington ஆய்வின் (ஆங்கிலம் மட்டும்) மூலம் அதிக மக்கள் வெளிப்பாடு அறிவிப்பைப் பயன்படுத்தும்போது, அதிக நன்மை கிடைக்கும் என்று கண்டறியப்பட்டது. WA Notify 40-115 உயிர்களைக் காப்பாற்றியது மற்றும் அது பயன்பாட்டில் இருந்த முதல் நான்கு மாதங்களில் சுமார் 5,500 COVID-19 வழக்குகளைத் தடுத்தது. WA Notify ஐப் பயன்படுத்தும் ஒரு சிறிய எண்ணிக்கையிலான மக்கள் கூட COVID-19 நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகளைக் குறைப்பார்கள் என்று தரவு மாதிரிகள் காட்டுகின்றன, இதன் மூலம் COVID-19 பரவுவதைத் தடுக்க WA Notify ஒரு சிறந்த சாதனமாகும் என்பது நிருபிக்கப்பட்டுள்ளது.

WA Notify (WA அறிவிப்பு)பற்றியச் செய்தியைப் பரப்ப உதவி செய்ய விரும்புகிறீர்களா?

சமூக ஊடகச் செய்திகள், சுவரொட்டிகள், வானொலி மற்றும் தொலைக்காட்சியில் மாதிரி விளம்பரங்கள் மற்றும் பலவற்றிற்கு எங்கள் WA Notify கருவித்தொகுப்பைப் பார்க்கவும்.

அடிக்கடி கேட்கப்படும் பிற கேள்விகள்

நான்Washington State Department of Health (DOH)(நான் வாஷிங்டன் மாநில சுகாதாரத் துறை) ( இலிருந்து ஒர் அறிவிப்பை அல்லது/மற்றும் ஒரு உரையைப் பெற்றேன். ஏன்?

DOH சமீபத்தில் COVID-19 க்கு நேர்மறை சோதனை செய்த அனைவருக்கும் ஒரு குறுஞ்செய்தி மற்றும்/அல்லது பாப்-அப் அறிவிப்பை அனுப்புகிறது, இதனால் WA Notify பயனர்கள் கூடுமானவரை வெளிப்பாட்டின் சாத்தியமுள்ள மற்ற பயனர்களை விரைவாகவும் அநாமதேயமாகவும் எச்சரிக்க முடிகிறது. இந்த அறிவிப்புகளைப் பற்றி மேலும் அறியவும் மற்றும்  அவை எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கவும் .

இரண்டையும் நீங்கள் பெற்றால், நீங்கள் அறிவிப்பைத் மெதுவாகத் தட்டவும் அல்லது குறுஞ்செய்தியில் உள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும் மற்றும் சாத்தியமான வெளிப்பாடு உள்ள பிற பயனர்களை அநாமதேயமாக எச்சரிக்கவும், WA Notify உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.

எனக்கு தடுப்பூசி போடப்பட்டு இருந்தாலும்WA Notify தேவையா?

ஆம். நீங்கள் கோவிட் -19 க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போட்ட பிறகும், நீங்கள் வழக்கமான நோய்த்தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும். தடுப்பூசிகள் உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான ஒரு சிறந்த வழியாகும், ஆனால் தடுப்பூசி போடப்படாத மற்றவர்கள் மூலம் உங்களுக்கு அல்லது உங்களால் மற்றவர்களுக்கு தொற்று ஏற்படக்கூடிய ஒரு சிறிய ஆபத்து இன்னும் உள்ளது.

எனதுWA Notify தரவுகளை பொது சுகாதாரத்திற்கு பங்களிப்பது பற்றி எனக்கு ஒரு அறிவிப்பு வந்தது. ஏன்?

 Washington State Department of Health (DOH) யானது WA Notify எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது என்பதை அறிய விரும்புகிறது. அதன்படி அந்த செயலிக்கு தேவையான மேம்பாடுகளையும் செய்ய முடியும்.  நீங்கள் உங்களுடைய WA Notify தரவுகளைப் பகிர ஒப்புக்கொண்டாலும், உங்கள் தனியுரிமை முழுமையாகப் பாதுகாக்கப்படும். தனிப்பட்ட தகவல்கள் எதுவும் சேகரிக்கப்படுவதில்லை அல்லது பகிரப்படுவதில்லை. மேலும் உங்களை அடையாளம் காண்பதற்கான வழிகள் எதுவும் இல்லை. DOH மட்டுமே இந்தத் தரவை அணுக முடியும், அதையும் மாநில அளவில் மட்டுமே அணுக முடியும்.

ஒரு வேளை WA Notify பயனர்கள் தங்கள் தரவுகளைப் பகிர்ந்துக் கொள்ள ஒப்புக்கொண்டால், என்ன தரவு சேகரிக்கப்படுகிறது?

தரவுகளைப் பகிர ஒப்புக்கொண்டாலும், உங்கள் தனியுரிமை முழுமையாகப் பாதுகாக்கப்படுகிறது. தனிப்பட்ட தகவல்கள் எதுவும் சேகரிக்கப்படுவதில்லை அல்லது பகிரப்படுவதில்லை. மேலும் உங்களை அடையாளம் காண்பதற்கான வழிகள் எதுவும் இல்லை. Washington State Department of Health மட்டுமே இந்த மாநில அளவிலான தரவுகளை அணுக முடியும். இது பின்வருவனவற்றை உள்ளடக்கியது:

 • WA Notify தங்கள் தரவுகளைப் பகிர்ந்து கொள்ள ஒப்புக்கொள்கிறவர்களின் எண்ணிக்கை. இது எங்கள் மாதிரியின் அளவை அறிய உதவுகிறது.
 • WA Notify மூலம் பெறப்பட்ட Exposure Notifications பயனர்களின் எண்ணிக்கை. COVID-19 பரவலின் போக்கினை அறிய இது எங்களுக்கு உதவுகிறது.
 • தொடர்பு நிலை குறித்த அறிவிப்பை பெறுவதற்கு கிளிக் செய்யும் நபர்களின் எண்ணிக்கை. பொது சுகாதாரத்திற்கான பரிந்துரைகளை மக்கள் எவ்வாறு கருதுகிறார்கள் என்பதை அறிய எங்களுக்கு இது உதவுகிறது.

COVID-19 உறுதி செய்யப்பட்ட நபர் ஒருவரின் அருகில் இருந்தவர்களின் எண்ணிக்கை, ஆனால் ஒரு வெளிப்பாடு பற்றி அறிவிக்க போதுமான அளவு நெருக்கமாக அல்லது நீண்ட நேரம் இல்லை. WA Notify ஒரு தொடர்பு நிலையினை நிர்ணயிக்கும் வழிமுறை சரிசெய்யப்பட வேண்டுமா என்பதைக் கருத்தில் கொள்ள இது எங்களுக்கு உதவுகிறது.

எனது iPhone இல் WA Notify இயக்கும்போது, "Availability Alerts (கிடைக்கும் நிலை பற்றிய எச்சரிக்கைகளை" செயல்படுத்த வேண்டுமா அல்லது முடக்க வேண்டுமா?

முடக்குவதே சிறந்தது. நீங்கள் கணிசமான நேரம் வாஷிங்டன் மாநிலத்திற்கு வெளியே பயணம் செய்தால் அதை இயக்க பரிந்துரைக்கப்படுகிறது. "கிடைக்கும் எச்சரிக்கைகள்" இயக்கத்தில் இருக்கும்போது, நீங்கள் ஒரு இடத்திற்குச் செல்லும்போது வேறு தொடர்பு நிலை அறிவிப்பு தொழில்நுட்பத்துடன் WA Notify தவிர, வேறு அறிவிப்புகளையும் பெறலாம். iPhone பயனர்கள் பல பிராந்தியங்களைச் சேர்க்க முடியும், ஆனால் ஒரு நேரத்தில் ஒரு பிராந்தியத்தை மட்டுமே செயல்பாட்டில் வைக்க முடியும். புதியதைச் செயல்படுத்த நீங்கள் ஒரு பிராந்தியத்தை நீக்கத் தேவையில்லை. ஆண்ட்ராய்டு பயனர்கள் பல மாநிலங்களில் இருந்து பெறப்படும் WA Notify போன்ற செயலிகளை நிறுவலாம், ஆனால் ஒரு நேரத்தில் செயலில் உள்ளதாக அறிவிக்கப்படும் WA Notify தொழில்நுட்பத்துடன் இணக்கமான செயலியை மட்டுமே பயன்படுத்த முடியும்.

நான் பயன்படுத்த தேர்வு செய்ய வேண்டுமா WA Notify?

ஆம். WA Notify இலவசமானது மற்றும் தன்னார்வமானது. நீங்கள் எந்த நேரத்திலும் அதில் இருந்து விலகலாம். அதன் அம்சத்தை அணைக்கவும் அல்லது செயலியை நீக்கவும். அருகிலுள்ள மற்ற பயனர்களிடமிருந்து தொலைபேசி சேமித்து வைத்திருக்கும் அனைத்து சீரற்ற குறியீடுகளும் நீக்கப்படும் மற்றும் அவற்றை மீட்டெடுக்க முடியாது.

இந்த WA Notify தொடர்புத் தடமறிதல் செயலியா?

இல்லை. WA Notify உங்கள் அருகில் இருந்த நபர்களைப் பற்றிய தகவல்களை அது கண்காணிக்கவோ கண்டுபிடிக்கவோ செய்யாது. எனவே அது "தொடர்புத் தடமறிதல்" வேலை செய்வதில்லை. தொடர்புத் தடமறிதல் COVID-19 க்கு நேர்மறை சோதனை செய்த ஒரு நபரின் தொடர்புநிலையில் இருந்த யாவரையும் அடையாளம் காட்டுகிறது. இந்த செயலி எந்தவொரு தனிப்பட்ட நபரின் தகவலையும் சேகரிக்கவோ அல்லது பரிமாறிக்கொள்ளவோ செய்யாது, எனவே நீங்கள் யாருடன் தொடர்பு கொண்டீர்கள் என்பது யாருக்கும் தெரியாது.

”வெளிப்பாடு என்றால் என்ன”?

பின்னர் COVID-19 க்கு நேர்மறை சோதனை செய்யப்படுகின்ற மற்றொரு WA Notify பயனருக்கு அருகில் நீங்கள் கணிசமான நேரத்தை செலவழிக்கும் போது வெளிப்பாடு ஏற்படுகிறது. இது உடல் ரீதியான தூரம் மற்றும் கோவிட்-19 பரவுதல் தொடர்பான தற்போதைய CDC (Centers for Disease Control and Prevention) (நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள்) களின் வழிகாட்டுதலைப்  (ஆங்கிலம் மட்டும்) பின்பற்றுகிறது. வெளிப்பாட்டை தீர்மானிக்க, WA Notify ஆனது CDC நெருக்கமான தொடர்பு என்றால் என்ன என்ற வரையறையுடன் - 6 அடிக்குள் (2 மீட்டர்) 15 நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் நோய்த்தொற்று பரவும் காலத்தில் – பொது சுகாதார அதிகளால் சரி செய்யக்கூடிய முறையில் ஒரு வழிமுறையைப் பயன்படுத்துகிறது.

நான் வெளிப்படுத்தப்பட்டு உள்ளதாக WA Notify அறிவித்தால் என்ன செய்ய வேண்டும்?

WA Notify நீங்கள் வெளிப்படுத்தப்பட்டு இருப்பதைக் கண்டறிந்தால், உங்கள் தொலைபேசியில் ஒர் அறிவிப்பு வரும். அது நீங்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற தகவலுடன் ஒரு வலைத்தளத்திற்கு உங்களை கொண்டு செல்லும். இதில் எப்படி, எங்கு பரிசோதனை செய்து கொள்வது, உங்களையும் உங்களுக்கு நெருக்கமானவர்களையும் எப்படி பாதுகாப்பாக வைத்திருப்பது பற்றிய தகவல்கள் மற்றும் உங்கள் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கான ஆதாரங்கள் ஆகியவை இருக்கும். இணையதளத்தில் உள்ள வழிமுறைகளை கவனமாக படித்து பின்பற்றுவது அவசியமாகும்.

நான் COVID-19 க்கு நேர்மறை சோதனை செய்யப்பட்டுள்ளது மக்களுக்குத் தெரியுமா?  

இல்லை. WA Notify உங்களைப் பற்றிய எந்த தகவலையும் வேறு யாருடனும் பகிர்ந்து கொள்ளாது.  சாத்தியமான வெளிப்பாடு குறித்து யாராவது அறிவிப்பைப் பெறும்போது, கடந்த 14 நாட்களில் அவர்கள் அருகில் இருந்த ஒருவர் கோவிட்-19க்கு நேர்மறை சோதனை செய்ததை மட்டுமே அவர்கள் அறிவார்கள். அந்த நபர் யார் அல்லது எங்கு வெளிப்பாடு ஏற்பட்டது என்பது அவர்களுக்குத் தெரியாது.

நான்WA Notify க்காக பணம் செலுத்த வேண்டுமா?

இல்லை. WA Notify இலவசமாகும்.

எவ்வாறு WA Notify வாஷிங்டன் மாநிலத்திற்கு உதவும்?

சமீபத்திய University of Washington ஆய்வின் (ஆங்கிலம் மட்டும்) மூலம் அதிக மக்கள் வெளிப்பாடு அறிவிப்பைப் பயன்படுத்தும்போது, அதிக நன்மை கிடைக்கும் என்று கண்டறியப்பட்டது. WA Notify 40-115 உயிர்களைக் காப்பாற்றியது மற்றும் அது பயன்பாட்டில் இருந்த முதல் நான்கு மாதங்களில் சுமார் 5,500 COVID-19 வழக்குகளைத் தடுத்தது. WA Notify ஐப் பயன்படுத்தும் ஒரு சிறிய எண்ணிக்கையிலான மக்கள் கூட COVID-19 நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகளைக் குறைப்பார்கள் என்று தரவு மாதிரிகள் காட்டுகின்றன, இதன் மூலம் COVID-19 பரவுவதைத் தடுக்க WA Notify ஒரு சிறந்த சாதனமாகும் என்பது நிருபிக்கப்பட்டுள்ளது.

நான் மாநிலத்திற்கு வெளியே செல்லும்போது WA Notify வேலை செய்யுமா?

ஆம். ஆப்பிள்/கூகுள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் ஒரு செயலியுடன் நீங்கள் ஒரு மாநிலத்திற்குச் சென்றால், உங்கள் தொலைபேசி அந்த மாநிலத்தில் உள்ள மற்ற பயனர்களுடன் சீரற்ற குறியீடுகளை பரிமாறிக்கொண்டே இருக்கும். உங்கள் செயலியின் அமைப்புகளில் எதையும் மாற்றத் தேவையில்லை. நீங்கள் நீண்ட நாட்களுக்கு வாஷிங்டனை விட்டு வெளியே சென்றால், உங்களின் புதிய மாநிலத்தின் உள்ளூர் ஆதரவு மற்றும் விழிப்பூட்டல்களைப் பெறுவதற்கு உங்கள் விருப்பங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

நமக்கு தொடர்புத் தடமறிதல் மற்றும் WA Notify செயலி ஆகிய இரண்டுமே ஏன் தேவைப்படுகிறது?

தொடர்பு தடமறிதல் பல தசாப்தங்களாக இருக்கும் ஒரு பயனுள்ள பொது சுகாதார தலையீடாகும். WA Notify இந்த வேலையை அநாமதேயமாக ஆதரிக்கிறது. இங்கே ஒரு உதாரணம்: நீங்கள் கோவிட்-19க்கு சாதகமாக சோதனை செய்தால், பொது சுகாதார அதிகாரிகள் உங்களை அழைத்து உங்கள் நெருங்கிய தொடர்புகளைப் பகிருமாறு கேட்கலாம். நீங்கள் பேருந்தில் பயணிக்கும்போது உங்கள் அருகில் அமர்ந்திருந்த அந்நியரின் பெயரைச் சொல்ல முடியாது. ஆனால், நீங்கள் இருவரும் WA Notify செயலியைப் பயன்படுத்தினால், பேருந்தில் இருக்கும் அந்நிய நபர் அநாமதேயமாக சாத்தியமான வெளிப்பாடு குறித்து எச்சரிக்கப்பட்டு, அவர்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு COVID-19 பரவுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கலாம். கைகளைக் கழுவுதல் மற்றும் மாஸ்க் அணிவது போன்ற செயல்கள் ஒவ்வொன்றும் COVID-19 பரவுவதைத் தடுக்க உதவுகின்றன, அவற்றை ஒன்றாக சேர்த்து கடைப்பிடிக்கும்போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மற்ற பயனர்களுக்கு அறிவிக்க WA Notify செயலிக்கு எவ்வளவு காலம் ஆகும்?

மற்றொரு பயனரால் கோவிட் -19 க்கு ஆளாகியிருக்கும் பயனர்கள் கோவிட்-பாசிட்டிவ் பயனர் WA Notify இல் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றி, WA Notify இன் பிற பயனர்களை மறைமுகமாக எச்சரிப்பதற்கு வசதியாக, 24 மணி நேரத்திற்குள் அறிவிப்பைப் பெறுவார்கள்.

இந்த WA Notify செயலியில் இருந்து பல விழிப்பூட்டல்களைப் பெறுவது சாத்தியமா?

மற்றொரு பயனரால் கோவிட் -19 க்கு ஆளாகியிருக்கும் பயனர்கள் கோவிட்-பாசிட்டிவ் பயனர் WA Notify இல் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றி, WA Notify இன் பிற பயனர்களை மறைமுகமாக எச்சரிப்பதற்கு வசதியாக, 24 மணி நேரத்திற்குள் அறிவிப்பைப் பெறுவார்கள்.

நான் கோவிட்டுக்கு நேர்மறை சோதனை செய்தால் WA Notify க்கு எப்படி தெரியப்படுத்துவது?

நீங்கள் நேர்மறையாக சோதிக்கப்பட்டு பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் உங்களை அணுகினால், நீங்கள் WA Notify செயலியைப் பயன்படுத்துகிறீர்களா என்று கேட்பார்கள்.நீங்கள் பயன்படுத்துவதாக இருந்தால், அவர்கள் உங்களுக்கு ஒரு சரிபார்ப்பு இணைப்பு மற்றும்/அல்லது அறிவிப்பை அனுப்புவார்கள் மற்றும் அதை WA Notify செயலியில் உள்ளிடுவதற்கான படிகளைப் பின்பற்ற உதவுவார்கள். இணைப்பு அல்லது அறிவிப்பு உங்கள் தனிப்பட்ட தகவலுடன் இணைக்கப்படவில்லை. நீங்கள் படிகளைப் பின்பற்றி உள்ளிடும்போது, வெளிப்பாடு பற்றி செயலியின் மூலம் யாருக்கு அறிவிக்கப்படும் என்பதைப் பற்றி அறிய பொது சுகாதாரத்திற்கு வழி இல்லை. வெளிப்பாடு அறிவிப்பில் உங்களைப் பற்றிய வேறு எந்த தகவலும் இருக்காது. மறைமுகமான முறையில் அதிகமான மக்கள் தங்கள் முடிவுகளை WA Notify செயலியில் உறுதி செய்தால், கோவிட்-19 பரவுவதை நம்மால் தடுக்க முடியும்.

நீங்கள் நேர்மறை சோதனை செய்திருந்து மற்றும் உங்கள் முடிவை WA Notify உறுதி செய்ய வேண்டும் என்றால், 1-800-525-0127 என்ற எண்ணில் கோவிட் -19 ஹாட்லைனை அழைக்கவும், பின்னர் # ஐ அழுத்தி WA Notify,  அறிவிப்பிற்கான வழிமுறைகளைப் பின்பற்றவும்.

எனது தொலைபேசியில் WA Notify ஐச் சேர்த்த பிறகு நான் ஏதாவது செய்ய வேண்டுமா?

கூடுதல் நடவடிக்கை தேவைப்பட்டால் மட்டுமே:

 1. நீங்கள் COVID-19 க்கு நேர்மறை சோதனை செய்தீர்கள், அல்லது
 2. நீங்கள் வெளிப்பட்டிருக்கலாம் என்று ஒரு அறிவிப்பைப் பெறுவீர்கள்.

நீங்கள் நேர்மறை சோதனை செய்து, பொது சுகாதாரத் துறை அதிகாரிகள்  உங்களை அணுகினால், நீங்கள் WA Notify செயலியைப் பயன்படுத்துகிறீர்களா என்று கேட்பார்கள். நீங்கள் பயன்படுத்துவதாக இருந்தால், அவர்கள் உங்களுக்கு ஒரு சரிபார்ப்பு இணைப்பு மற்றும்/அல்லது அறிவிப்பை அனுப்புவார்கள் மற்றும் அதை WA Notify செயலியில் உள்ளிடுவதற்கான படிகளைப் பின்பற்ற உதவுவார்கள். இணைப்பு அல்லது அறிவிப்பு உங்கள் தனிப்பட்ட தகவலுடன் இணைக்கப்படவில்லை. நீங்கள் படிகளைப் பின்பற்றி உள்ளிடும்போது, வெளிப்பாடு பற்றி செயலியின் மூலம் யாருக்கு அறிவிக்கப்படும் என்பதைப் பற்றி அறிய பொது சுகாதாரத்திற்கு வழி இல்லை. வெளிப்பாடு அறிவிப்பில் உங்களைப் பற்றிய வேறு எந்த தகவலும் இருக்காது. மறைமுகமான முறையில் அதிகமான மக்கள் தங்கள் முடிவுகளை  மறைமுகமான முறையில் அதிகமான மக்கள் தங்கள் முடிவுகளை WA Notify செயலியில் உறுதி செய்தால், கோவிட்-19 பரவுவதை நம்மால் தடுக்க முடியும்.

இந்த WA Notify செயலியானது நீங்கள் வெளிப்படுத்தப்பட்டு இருப்பதைக் கண்டறிந்தால், உங்கள் தொலைபேசியில் ஒரு அறிவிப்பு வரும். அது நீங்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற தகவலுடன் ஒரு வலைத்தளத்திற்கு உங்களைக் கொண்டு செல்லும். இதில் எப்படி, எங்கு பரிசோதனை செய்து கொள்வது, உங்களையும் உங்களுக்கு நெருக்கமானவர்களையும் எப்படி பாதுகாப்பாக வைத்திருப்பது பற்றிய தகவல்கள் மற்றும் உங்கள் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கான ஆதாரங்கள் ஆகியவை இருக்கும். இணையதளத்தில் உள்ள வழிமுறைகளை கவனமாக படித்து பின்பற்றுவது அவசியமாகும். அந்த அறிவிப்பில் யார் அல்லது எங்கு உங்களை வெளிப்படுத்தியிருக்கலாம் என்பது பற்றிய தகவல்கள் இருக்காது. இது முற்றிலும் அநாமதேயமானது .

இந்த WA Notify செயலியைப் பயன்படுத்தினால் எனது பேட்டரி காலியாகிவிடுமா அல்லது அது நிறைய தரவுகளை பயன்படுத்துமா?  

இல்லை. இந்த செயலியானது குறைந்த ஆற்றலுள்ள தொழில்நுட்பத்துடன் கூடிய ப்ளூடூத்தைப் பயன்படுத்தி உங்கள் தரவு மற்றும் பேட்டரியின் ஆயுள் மீது குறைவான விளைவை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த WA Notify செயலி இயங்குவதற்கு வசதியாக நான் ப்ளூடூத்தைப் ஆன் செய்து வைத்திருக்க வேண்டுமா?

ஆம். WA Notify செயலியானது புளூடூத்தின் குறைந்த ஆற்றலைப் பயன்படுத்துகிறது, எனவே அருகிலுள்ள பிற பயனர்களைக் கண்டறிய கணினிக்கு ப்ளூடூத் எப்போதும் செயலில் இருக்க வேண்டும்.

இந்த WA Notify செயலி வேலை செய்வதற்காக நான் எனது தொலைபேசியை திறந்த நிலையில் வைக்க வேண்டுமா?

இல்லை. WA Notify செயலியானது பின்னணியில் வேலை செய்கிறது.

இந்த WA Notify செயலியானது தவறான பரிசோதனை அறிக்கைகளைத் தடுக்கிறது?

WA Notify செயலியானது பயனர்கள் பொது சுகாதார அதிகாரிகளால் வழங்கப்பட்ட சரிபார்ப்பு இணைப்பு அல்லது அறிவிப்பைப் பயன்படுத்தி நேர்மறை சோதனைகளை அநாமதேயமாக உறுதிப்படுத்த உதவுகிறது. இணைப்பு அல்லது அறிவிப்பு ஒரு நபரின் அடையாளத்துடன் பிணைக்கப்படவில்லை. சரிபார்ப்பு இணைப்பு அல்லது அறிவிப்பை நீங்கள் கிளிக் செய்தவுடன் அல்லது தட்டிய பிறகு, WA Notify அருகிலுள்ள பயனர்களின் சீரற்ற குறியீடுகளுடன் பொருந்தலாம் மற்றும் சாத்தியமான வெளிப்பாடு குறித்து அவர்களுக்கு அறிவிக்கலாம். அந்த அறிவிப்பில் யார் அவர்களை வெளிப்படுத்தியிருக்கலாம் அல்லது எங்கு வெளிப்ப்பாடு நிகழ்ந்தது என்பது பற்றிய எந்த தகவலும் இருக்காது.

இந்த WA Notify செயலியானது பழைய ஸ்மார்ட்போன்களை ஆதரிக்கிறதா?

iPhone இயக்க அமைப்பு பின்வருவனவற்றில் ஒன்றாக இருந்தால் பயனர்கள் WA Notify ஐ பயன்படுத்த முடியும்:

 • iOS பதிப்பு 13.7 அல்லது அதற்குப் பிந்தையவை (iPhone 6s, 6s Plus, SE அல்லது புதியவை)
 • iOS பதிப்பு 12.5 (iPhone 6, 6 plus, 5s -களுக்கானது)

உங்கள் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் புளூடூத் குறைந்த ஆற்றல் மற்றும் ஆன்ட்ராய்டு பதிப்பு 6 (API 23) அல்லது அதற்கு மேற்பட்டவற்றை ஆதரித்தால் ஆன்ட்ராய்டு பயனர்கள் WA Notify ஐ பயன்படுத்தலாம்.

இந்த WA Notify செயலியைப் பயன்படுத்த எனக்கு 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டுமா?

இல்லை. WA Notify செயலியானது உங்கள் வயதை அறியாது அல்லது வயதைச் சரிபார்க்கவும் செய்யாது.

நான் எனது தொலைபேசியை வேறு ஒருவருடன் பகிர்ந்தால் இந்த தொழில்நுட்பம் வேலை செய்யுமா?

WA Notify செயலியானது சாத்தியமான வெளிப்பாட்டின் போது யார் தொலைபேசியைப் பயன்படுத்துகிறார்கள் என்று சொல்ல முடியாது. நீங்கள் தொலைபேசியைப் பகிர்ந்தால், WA Notify செயலியானது COVID-19 க்கு சாத்தியமான வெளிப்பாட்டைக் காண்பித்தால், தொலைபேசியைப் பயன்படுத்தும் அனைவரும் பொது சுகாதார வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

WA Notify அறிவிப்பு iPads அல்லது ஸ்மார்ட் வாட்சுகள் போன்ற சாதனங்களில் வேலை செய்கிறதா?  

இல்லை. இந்த வெளிப்பாடு அறிவிப்பின் கட்டமைப்பானது குறிப்பாக ஸ்மார்ட்போன்களுக்காக வடிவமைக்கப்பட்டது மற்றும் அது ஐபாட்கள் அல்லது டேப்லெட்களை ஆதரிப்பதில்லை.

ஸ்மார்ட்போன்கள் இல்லாத மக்களுக்கு இந்த தொழில்நுட்பத்தை அணுக வாஷிங்டன் மாநிலம் என்ன செய்கிறது?

WA Notify செயலி மட்டும் COVID-19 பரவுவதைத் தடுக்க உதவும் கருவி அல்ல. தொடர்பு கண்காணிப்பு மற்றும் பிற முயற்சிகள் ஒவ்வொரு வாஷிங்டன் குடியிருப்பாளருக்கும் பயனளிக்கிறது, அவர்களிடம் ஸ்மார்ட்போன் இல்லையென்றாலும் கூட. கோவிட் -19 பரவுவதைத் தடுப்பதற்கு தடுப்பூசிகள் சிறந்த வழியாகும், மேலும் முகமூடி அணிவது, உடல் ரீதியாக விலகி இருப்பது மற்றும் கூட்டங்களின் அளவைக் கட்டுப்படுத்துதல் ஆகியவை கோவிட் -19 பரவுவதைத் தடுக்க அனைவரும் உதவக்கூடிய மற்ற வழிகள் ஆகும்.

மத்திய அரசின் Lifeline program (வாழ்நாள் திட்டம்) தகுதி உள்ளவர்களுக்கு மாதாந்திர தொலைபேசி பில் கடனை வழங்குகிறது. பங்கேற்கும் சில வயர்லெஸ் சேவை வழங்குநர்கள் இலவச ஸ்மார்ட்போனையும் வழங்கக்கூடும். விண்ணப்பிக்கும் முறை, பங்கேற்பதற்கான நிரல், யார் தகுதியுடையவர்கள், மற்றும் வயர்லெஸ் வழங்குநர்கள் பற்றி மேலும் அறிக  (ஆங்கிலம் மட்டும்).

நினைவில் கொள்ளுங்கள், COVID-19 தடுப்பூசியைப் பெறுவது மட்டுமே நோய் பரவுவதைத் தடுக்க சிறந்த வழியாகும்.

ஏன் இந்த WA Notify செயலியானது நிறைய பேட்டரியின் ஆற்றலைப் பயன்படுத்துவதுபோல் தெரிகிறது?

உண்மையில், அப்படி இல்லை. உங்கள் சாதனத்தில் உள்ள பேட்டரி பயன்பாடு ஒவ்வொரு நாளும் WA Notify போன்ற செயலிகளால் பயன்படுத்தப்படும் பேட்டரியின் சதவீத்தைக் காட்டுகிறது. பெரும்பாலான செயலிகள் இரவு முழுவதும் இயங்காது. WA Notify இரண்டையும் சாராது. ஆனால், இது ஒவ்வொரு சில மணி நேரங்களுக்கும் பாதிக்கப்பட்ட நபருடன் பொருந்தக்கொடிய தொடர்பின்றி எடுக்கப்பட்ட குறியீடுகளை சரிபார்த்து சாத்தியமான தொடர்பு நிலைகள் குறித்து உங்களை எச்சரிக்கும். எடுத்துக்காட்டாக, நீங்கள் தூங்கும் போது வேறு செயலிகள் எதுவும் இயங்கவில்லை என்றால், அந்த நேரத்தில் பயன்படுத்தப்படும் பேட்டரியில் அதிக சதவீதத்தை WA Notify குறிக்கும். WA Notify அதிக பேட்டரியைப் பயன்படுத்துகிறது என்று அர்த்தமல்ல - அதிக சதவீதத்தில் குறைந்த அளவு பேட்டரி சக்தியை பயன்படுத்துகிறது.

வாஷிங்டன் மாநிலம் WA Notify செயலியை 30க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியிட்டது, அப்படி இருக்கும்போது நான் ஏன் அதை Google Play ஸ்டோரில் ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழியில் மட்டுமே பார்க்கிறேன்?

WA Notify பயனரின் தொலைபேசியில் இயல்புநிலையாக அமைக்கப்பட்ட மொழியை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. WA Notify இன் ஒரே ஒரு பதிப்பு உள்ளது, ஆனால் எந்த பாப்-அப்களும் - ஒரு வெளிப்பாடு அறிவிப்பு, எடுத்துக்காட்டாக - வாஷிங்டன் மாநிலத்தில் செயல்படுத்தப்பட்ட 30 க்கும் மேற்பட்ட மொழிகளில் பயனரின் விருப்பமான மொழியில் தோன்றும். 

எனக்கு ஒரு அறிவிப்பு மற்றும்/அல்லது ஒரு உரை கிடைத்தது, ஆனால் சோதிக்கப்பட்ட நபர் ஒரு குடும்ப அல்லது வீட்டு உறுப்பினர் ஆவார்.  நான் என்ன செய்ய வேண்டும்? 

நேர்மறை சோதனை செய்த WA Notify பயனர் வெளிப்படுத்தப்பட்ட மற்றவர்களை அநாமதேயமாக எச்சரிக்கை செய்வதற்கான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும், எனவே உங்களுக்கு பொருந்தாத எந்தவிதமான உரைகளையும் அல்லது அறிவிப்புகளையும் நீங்கள் புறக்கணிக்க வேண்டும்.

உங்கள் குடும்பம் அல்லது வீட்டு உறுப்பினர் ஒரு WA Notify பயனராக இருந்து நேர்மறையாக பரிசோதனை செய்திருந்தால், இன்னும் WA Notify செயலியில் அவர்களின் பரிசோதனை முடிவை உறுதிப்படுத்த வேண்டும் என்றால், அவர்கள் 1-800-525-0127 இல் கோவிட் -19 ஹாட்லைனை அழைக்கலாம், பின்னர் # ஐ அழுத்தவும் மற்றும் WA Notify க்கான வழிமுறைகளைப் பின்பற்றவும். அழைப்புக்கு பதிலளிக்கும்போது, ஒரு WA Notify சரிபார்ப்பு இணைப்பைக் கேட்கவும்.

அறிவிப்பைத் தட்ட அல்லது சரிபார்ப்பு இணைப்பைச் செயல்படுத்த எனக்கு எவ்வளவு நேரம் இருக்கிறது?  

WA Notify இல் உள்ள மற்றவர்களுக்கு அறிவிப்பதற்கான வழிமுறைகளைப் பின்பற்றுவதற்கு உங்களுக்கு அறிவிப்பு அல்லது குறுஞ்செய்தி வந்த பிறகு 24 மணிநேரம் உள்ளது. அந்த நேரத்திற்குள், நீங்கள் அறிவிப்பைத் மெதுவாகத் தட்ட முடியாவிட்டால் அல்லது சரிபார்ப்பு இணைப்பைக் கிளிக் செய்ய முடியாவிட்டால், 1-800-525-0127 என்ற எண்ணில் கோவிட் -19 ஹாட்லைனை அழைக்கவும், பின்னர் # ஐ அழுத்தி WA Notify இல் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றுங்கள். அழைப்புக்கு பதிலளிக்கும்போது, ஒரு WA Notify சரிபார்ப்பு இணைப்பைக் கேட்கவும். உங்கள் கோவிட் -19 சோதனை முடிவுகள் குறித்து பொது சுகாதாரம் உங்களை அணுகும்போது நீங்கள் ஒரு இணைப்பையும் கோரலாம்.

வாஷிங்டன் மாநிலம் என் இந்த தீர்வைத் தேர்ந்தெடுத்தது?

வாஷிங்டன் மாநிலம் Apple/Google தீர்வை மீளாய்வு செய்வதற்காக பாதுகாப்பு மற்றும் சிவில் உரிமை நிபுணர்கள் மற்றும் பல்வேறு சமுதாயங்களின் அங்கத்தினர்கள் உள்ளிட்ட மாநில மேற்பார்வைக் குழுவொன்றை அமைத்தது. அந்தக் குழு, தளத்தின் நிரூபிக்கப்பட்ட நம்பகத்தன்மை, வலுவான தரவு பாதுகாப்பு மற்றும் பிற மாநிலங்களின் பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் இத்தெரிவைப் பரிந்துரைத்தது.

வேலைவாய்ப்பு & தொழில்கள் தொடர்பான வாய்ப்பு வளங்கள்

வேலையின்மை பலன்கள்

உங்கள் வேலையை இழந்துவிட்டால், உங்களுக்கு வேலையின்மை பலன்களுக்கு தகுதி இருக்கக்கூடும். வேலையின்மை பலன்களைக் கோரும் படிவத்தை நிரப்புவதில் உங்களுக்கு தகவல் தேவையெனில், நீங்கள் 1-800-318-6022 என்ற எண்ணை அழைக்கலாம். அவர்கள் பதிலளிக்கையில், உங்கள் மொழியைச் சொல்லி மொழிபெயர்ப்பு சேவைகளைப் பெறலாம்.

தொழிலாளிகளும் தொழில் உரிமையாளர்களும்

கொரோனாவைரஸ் தீவிர தொற்றினால் நமது மாகாணத்தில் பல நூறாயிரக்கணக்கான பணியாளர்களும் தொழில் உரிமையாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொழிலாளர்களை பாதுகாப்பாக வைத்திருக்க தொழில் உரிமையாளர்கள் செய்யவேண்டியது:

 • தொழிலாளிகள் புரிந்துகொள்ளக்கூடிய மொழியில் COVID-19 தொற்று குறியீடுகள் மற்றும் அறிகுறிகளை அவர்களுக்கு கற்பிக்கவும்.
 • ஒரு சமூக இடைவெளி திட்டத்தை செயல்படுத்தவும்.
 • அடிக்கடி சுத்தப்படுத்தல் மற்றும் சுத்திகரித்தலை நடத்தவும்.
 • அடிக்கடியும் முறையாகவும் கைகளைக் கழுவுவதை உறுதிப்படுத்தவும்.
 • நோய்வாய்ப்பட்ட தொழிலாளிகள் வீட்டில் இருப்பதை உறுதிபடுத்தவும்.

ஊதியத்தோடு நோய்க்கால விடுப்பு, தொழிலாளர்களின் இழப்பீடு மற்றும் பணியிட பாதுகாப்பு தேவைகளின் சுருக்கம் பற்றிய பொதுவான கேள்விகளுக்கான பதில்கள் Department of Labor & Industries (தொழிலாளர் மற்றும் தொழில் துறை)யில் பல மொழிகளில் கிடைக்கின்றன.

உங்கள் பணியிட பாதுகாப்பு குறித்து உங்களுக்குக் கவலையிருந்தால், Department of Labor & Industriesஐ நேரடியாக 800-423-7233 என்ற எண்ணில் அழைத்து புகாரைப் பதிவுசெய்யலாம். தொலைபேசி மொழிபெயர்ப்பு வசதிகள் உள்ளன.

COVID-19 தொற்றுகாலத்தில் உங்கள் தொழில் மற்றும் தொழிலாளிகள் பற்றிய கேள்விகள் இருப்பின், வேலைவாய்ப்பு பாதுகாப்புத்துறையை 855-829-9243 என்ற எண்ணில் அழைக்கலாம்.

உடல் நலம் மற்றும் மருத்துவ காப்பீட்டு வாய்ப்புகள்

இலவச அல்லது குறைந்த செலவிலான மருத்துவக் காப்பீட்டுக்கு நீங்கள் தகுதிபெறலாம். 1-855-923-4633 என்ற எண்ணில் Health Care Authority யை அழைக்கவும். அவர்கள் பதிலளிக்கையில், உங்கள் மொழியைச் சொல்லி மொழிபெயர்ப்பு சேவைகளைப் பெறலாம்.

Alien Emergency Medical (AEM) பாதுகாப்பு என்பது அவசர மருத்துவ உதவி தேவைப்படும் குடியுரிமை அல்லது குடியேறுகைக்கான தேவைகளை பூர்த்திசெய்யாதோர் அல்லது 5 ஆண்டு தடுப்புக்காலம் பூர்த்தியாகாத தகுதிபெறும் தனி நபர்களுக்கான திட்டமாகும்.

நீங்கள் தகுதிபெறும் வெவ்வேறு உடல் நலத் திட்டங்கள் மற்றும் சேவைகளை அடையாளம் காணவும் விண்ணப்பிக்க உதவவும் 1-800-322-2588 என்ற பிரத்யேக எண்ணில் Help Me Grow வாஷிங்டனை அழைக்கலாம். இதில் அடங்குபவை:

 • WIC (பெண்கள், கைக்குழந்தைகள் & குழந்தைகள் ஊட்டச்சத்து திட்டம்)
 • குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் வயதுவந்தோருக்கான மருத்துவக் காப்பீடு
 • பொறுப்பேற்கும் திட்டத்தின் மூலம் பிறப்புக் கட்டுப்பாடு
 • உடல் நலம் மற்றும் குடும்பக் கட்டுப்பாட்டு மருத்துவமனைகள்
 • கர்ப்ப காலத்தில் மற்றும் குழந்தைக்கு தேவையானவை
 • தாய்ப்பாலூட்டலுக்கான உதவி
 • இதில் உணவுத் திட்டங்களும் ஆதார வளங்களும் உள்ளன. 
குடியேறியோர் மற்றும் அகதிக்கான தகவல்கள்

COVID-19 மற்றும் குடிபுகுபவர் கவலைகள் பற்றிய முக்கிய உண்மை விவரங்களைப் Office of Immigrant and Refugee Affairs (புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் விவகாரங்கள் அலுவலகம்) (OIRA) குடிபுகுபவர்களுக்கு உதவுகிறது. தெரிந்துகொள்ள வேண்டிய மற்ற சில விஷயங்கள்:

 • மருத்துவமனைகளும் மருந்து இல்லங்களும் குடியுரிமை அல்லது குடியேற்ற நிலைகள் குறித்து ICE-யுடன் பகிர அனுமதியில்லை.
 • COVID-19 தொற்று பரிசோதித்துக்கொள்வதாலோ நன்கொடை பெறுவதாலோ அல்லது மருத்துவ பராமரிப்பு சலுகைபெறுவதாலோ கிரீன் கார்டுக்கு அல்லது குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதில் அவை பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.
 • வேலையின்மை பலன்களுக்கு விண்ணப்பிக்க உங்களிடம் முறையான சமூக பாதுகாப்பு எண் இருக்கவேண்டும். வேலையின்மை பலன்களைப் பெறுவது குறித்து யாரிடமாவது நீங்கள் பேசவிரும்பினால் 1-800-318-6022 என்ற எண்ணில் அழைக்கலாம்.
 • அரசுதவியை நம்பியிருக்கும் நிலையின் விதிகளின்கீழ் கிரீன் கார்டு அல்லது குடியுரிமை விண்ணப்பிக்கும் உங்கள் திறனுக்கு வேலையின்மை பலன்களைப் பெறுதல் அச்சுறுத்தலாக அமையாது.
 • வாஷிங்டன் மாகாணத்தின் தொகை அளிக்கப்பட்ட குடும்பம் மற்றும் COVID-19 தொற்றினால் நோய்வாய்ப்பட்ட ஒருவரை பராமரிக்கவோ அல்லது வைரஸ் காரணமாக நீங்கள் நோய்வாய்ப்பட்டு உங்களை கவனித்துக்கொள்ள மருத்துவ விடுப்பு எடுக்கவும் நீங்கள் தகுதிபெறலாம். இந்த பலனைப்பெற உங்களுக்கு சமூக பாதுகாப்பு எண் தேவையில்லை. வேறு பலவகையான ஆவணங்களை ESD ஏற்கிறது.
 • நீங்கள் உதவியை நாடும் ஒரு வணிக உரிமையாளராக இருந்தால், Federal Small Business Administration (கூட்டாட்சி சிறு வணிக நிர்வாகத்திடம்) அவசரகால கடன் பெறுவதற்கு விண்ணப்பிப்பது வசிப்போர் அட்டை அல்லது தேசியத்தைப் பெறுவதற்கான உங்கள் திறனைப் பாதிக்காது.

Office of Immigrant and Refugee Affairs (புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் விவகாரங்கள் அலுவலகம்) (OIRA) உங்கள் நிலை அல்லது ஒரு குடும்ப உறுப்பினரின் நிலை அல்லது உங்கள் நன்மைகள் குறித்து உங்களுக்குத் தெரியாவிட்டால், ஒரு குடிபுகுவோர் வழக்கறிஞர், குடிபுகுவோர் அதிகாரி அல்லது Department of Justice (நீதித் துறை)யில் (DOJ) அங்கீகரிக்கப்பட்ட ஒரு பிரதிநிதியைத் தொடர்பு கொள்ளுமாறு பரிந்துரைக்கிறது. American Immigration Lawyers Association (அமெரிக்க குடிவரவு வழக்கறிஞர்கள் சங்கம்) வழியாகவும் நீங்கள் வழக்கறிஞரைக் கண்டுபிடிக்கலாம் அல்லது DOJ-அங்கீகரித்த அமைப்பின் இணையதளத்திற்கு செல்லலாம்.

அகதிகளுக்கும் குடிவந்தோருக்கும் உதவ OIRA கீழ்க்கண்டவற்றுக்கான திட்டங்களை வைத்துள்ளது:

 • வேலை தேடுதல் மற்றும் பயிற்சி.
 • குடியேற்ற உதவி.
 • இளையோருக்கான வழிகாட்டுதல்.
 • அகதிகளில் வயதானோர், குழந்தைகள், மாணவர்கள் மற்றும் பிறருக்கு உதவி.
 • COVID-19 தொற்றுகாலத்தில் வழக்கமான நிகழ்ச்சிகள் தொலைவழியில் திறந்துள்ளன. வேலைகளுக்கு அல்லது வேலையின்மைக்கு, உங்கள் கல்வியுதவிக்கு மற்றும் வீட்டுவசதிக்கு உதவி வழங்குவதில் உதவிபுரிய புதிய சேவைகளை அலுவலகம் கொண்டுள்ளது. அகதி ரொக்க உதவி மற்றும் அகதி மருத்துவ உதவிக்கான தகுதி செப். 30, 2020வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
 • சேவைகள் மற்றும் கூடுதல் தகவல்களுக்கு, அழைக்கவும்: 360-890-0691.

குடியேறியோருக்கான உரிமைகள், தடுத்துவைக்கப்பட்டுள்ள உறவினர்கள்/நண்பர்களுக்கு பரிந்துரை உதவி மற்றும் பிற தொடர்புடைய தகவல்கள் குறித்த கேள்விகள் இருப்பின், நீங்கள் வாஷிங்டன் குடியேற்ற ஒருமைப்பாட்டு வலைத்தொடர்புக்கான பிரத்யேக எண் 1-844-724-3737 ஐ அழைக்கலாம். தொலைபேசி மொழிபெயர்ப்பு வசதிகள் உள்ளன.

மனம் மற்றும் உணர்வு நலம்

இது ஒரு அழுத்தம் தரக்கூடிய நேரமாக இருக்கக்கூடும். நீங்களோ அல்லது உங்கள் அன்பிற்குரியவரோ தவிப்பு, கவலை, பயம் அல்லது கோபம் கொள்வது இயல்பானதே. நீங்கள் தனியாக இல்லை. உதவியைத் தேடி கேட்டுப்பெறுவது சரியானதே.

மன அழுத்தம் மற்றும் கடினமான சூழல்களில் ஒவ்வொருவரும் வெவ்வேறுவிதத்தில் எதிர்வினைபுரிகின்றனர். நீங்கள் செய்யக்கூடியவற்றில் மிக முக்கியமானது உங்களையும், உங்கள் குடும்பத்தையும் உங்கள் சமூகத்தையும் முடிந்தளவு சிறப்பாகக் கவனித்துக்கொள்வதுதான்.

சவாலான நேரங்களை நீங்கள் சமாளிக்க உதவுவது எது? நண்பர்களையும் குடும்பத்தையும் அடைந்து மீண்டும் இணைந்துள்ளீர்களா? ஒருவேளை கொஞ்சம் ஆழ்ந்த மூச்சுவிடுதல், நீட்டி முடக்கல், கொஞ்சம் உடற்பயிற்சி அல்லது ஒரு நல்ல இரவுத்தூக்கம்? சுய பராமரிப்புக்கு நேரம் ஏற்படுத்திக்கொள்வதில் முன்னுரிமை அளியுங்கள். இருப்பினும் அது உங்களைத் தேடிக் கண்டடைவதாயிருந்து, அழுத்தத்தைக் குறைக்க உதவும்.

Washington Listensஐ 1-833-681-0211 என்ற எண்ணில் அழையுங்கள். தொலைபேசி மொழிபெயர்ப்பு வசதிகள் உள்ளன. COVID-19 தீவிர தொற்றுக்கு பதிலளிக்கும் விதமாக, Washington Listens என்ற ஆதரவுத் திட்டத்தை வாஷிங்டன் துவக்கியுள்ளது. Washington Listens சேவைகளைப் பயன்படுத்துவோர் COVID-19 காரணமாக ஏற்படும் மாற்றங்களை சமாளிக்கவும் அதிகரிக்கும் அழுத்தத்தைக் கையாளவும் உதவி பெறுகிறார்கள். வாஷிங்டனிலுள்ள யாராயினும் ஓர் ஆதரவு வல்லுநருடன் பேசுவதற்கு Washington Listens உள்ளது. அழைப்பவர்கள் அவர்களது பகுதியிலுள்ள சமூக வளங்களுடன் இணைப்பையும் ஆதரவையும் பெறுகின்றனர். இந்தத் திட்டம் அனாமதேயமானது.

நீங்கள் நெருக்கடியில் இருக்கிறீர்கள், யாரிடமாவது ஆலோசனை பெறவேண்டுமென்ற தேவையிருந்தால், சில வழிகள் உள்ளன.

 • Disaster Distress Helpline இயற்கையான அல்லது மனிதரால் ஏற்படும் பேரிடர் தொடர்பாக எழும் உணர்வுரீதியான அழுத்தத்தை அனுபவிக்கும் நபர்களுக்கு உடனடி நெருக்கடி ஆலோசனை வழங்குகிறது. உதவிக்கு 1-800-985-5990 என்ற எண்ணை அழைக்கவும். அவர்கள் பதிலளிக்கையில், உங்கள் மொழியைச் சொல்லி மொழிபெயர்ப்பு சேவைகளைப் பெறலாம். இந்த பிரத்யேக எண் தினசரி 24 மணி நேரமும் செயல்படும்.
 • தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் உணர்வுரீதியான நெருக்கடியிலுள்ளோரின் நண்பர்களுக்கு உடனடி உதவி வழங்கக்கூடிய 24 மணிநேர நெருக்கடி இணைப்பு எண்ணை Crisis Connections கொண்டுள்ளது. இது King மாவட்டத்தில் வாழும் மக்களுக்கு சேவையாற்றுகிறது. தொலைபேசி மொழிபெயர்ப்பு வசதிகள் உள்ளன. அழைக்கவும் 1-866-427-4747.
 • National Suicide Prevention Lifeline தற்கொலை குறித்து சிந்திப்போருக்கு தடுப்பு மற்றும் நெருக்கடி நிலையிலான வாய்ப்புகளை வழங்குகிறது. அன்புக்குரியவரும் அவசர உதவி எண்ணை அழைத்து அவர்களது குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு உதவுவதற்கான வாய்ப்பு வளங்களைப் பெறலாம். அழைக்கவும்: 1-800-273-8255. இந்த பிரத்யேக எண் வாரத்தில் ஏழு நாட்களும் 24 மணி நேரமும் செயல்படும். முன்னாள் இராணுவ வீரர்களுக்கான தனிப்பட்ட உதவி எண் உள்ளது. 1-800-273-8255 என்ற எண்ணை அழைத்து 1 ஐ அழுத்தவும். காதுகேளாதோர் அல்லது கேட்புத் திறன் குறைபாடுடையோர் 1-800-799-4889 என்ற எண்ணை அழைக்கலாம்.
உணவு வளங்கள்

உங்களுக்கு 18 வயது அல்லது அதற்குக் குறைந்தவயதுள்ள குழந்தையிருந்தால் அவர்கள் பள்ளிக்கூடங்களிலிருந்து இலவச உணவு பெறலாம். கல்வித்திட்டங்களுக்கு பதிந்துள்ள குறைபாடுள்ள வயதுவந்தோருக்கும் பள்ளி உணவுகளைப் பெறும் தகுதியுண்டு. பல சமயங்களில், இந்த உணவுகள் பேருந்து நிறுத்தங்கள் போன்ற பள்ளிக்கூடத்துக்கு வெளியிலுள்ள இடங்களில் பட்டுவாடா அல்லது விநியோகிக்கப்படுகின்றன. உங்கள் மாவட்ட பள்ளியைத் தொடர்புகொண்டு அவர்கள் இலவச உணவு வழங்குகிறார்களா என கண்டறியவும்.

கர்ப்பிணிகள், புதிய தாய்மார்கள் மற்றும் ஐந்து வயதுக்குக்கீழ் உள்ள குழந்தைகள் Department of Health-ன் பெண்கள், கைக்குழந்தைகள் மற்றும் குழந்தைகள் (WIC) திட்டத்தின் வாயிலாக உணவைப் பெற முடியும். மொழி உதவிக்கு அழைக்கவும்: 1-866-632-9992.

COVID-19 தொற்று காலத்தின் அதிகரித்த உணவு தேவை காரணமாக உணவு வங்கிகளின் நேரங்கள் மாறியிருக்கலாம் அல்லது வருகை தருவோர் அதிகரிப்பினால் மூடப்பட்டிருக்கலாம். செல்வதற்குமுன் தயவுசெய்து அழைக்கவும். Northwest Harvest iஎன்பது மாகாணம் தழுவிய உணவு வங்கி வலையமைப்பு ஆகும். இந்த இணையதளத்தில் பச்சை பெட்டிக்கு இடதுபக்கமுள்ள பெட்டிக்குள் உங்கள் நகரத்தின் பெயரை தட்டச்சிடவும்.

நீங்கள் கிழக்கு வாஷிங்டனில் வசிப்பவர் எனில் Second Harvest-ல் உள்ள உணவு வங்கிகளின் பட்டியலைக் கண்டறியலாம். உங்கள் பகுதியிலுள்ள உணவுவங்கிகளின் பட்டியலுக்கு இந்த இணையதளத்தில் உங்கள் மாவட்டத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

அடிப்படை உணவு நன்மை அட்டைகள்

அடிப்படை உணவு நன்மை (EBT) அட்டைகளை உணவை வாங்கப் பயன்படுத்தலாம் மற்றும் இது பலதரப்பட்ட மக்களுக்கு கிடைக்கிறது. U.S. குடிமக்கள் வாஷிங்டன் மாநில Department of Social and Health Services (DSHS) இணையதளத்தில் உள்ள அடிப்படை உணவு பக்கத்தில் இந்த நன்மைக்காக விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: இந்த நெருக்கடியின் போது சில பெரியவர்களுக்கான வேலை தேவையை கூட்டாட்சி அரசு இடைநிறுத்தியுள்ளது. இருப்பினும், இந்த நன்மைக்கு தகுதிபெற நீங்கள் U.S. குடிமக்களாக இருக்க வேண்டும் என்று கூட்டாட்சி அரசு தேவைப்படுகிறது.

மற்ற அனைத்து திட்ட தேவைகளையும் பூர்த்தி செய்யும் குடிமக்கள் அல்லாத பலருக்கு மேலே விவரிக்கப்பட்டுள்ளவை போன்ற டெபிட்-ஸ்டைல் கார்டுகள் கிடைக்கின்றன. நீங்கள் இந்த நன்மையைப் பெற DSHS State Food Assistance Program உடன் விண்ணப்பிக்கலாம் (ஆங்கிலத்தில் மட்டும்).

குடும்பங்களுக்கான தகவல்களும் வாய்ப்பு வளங்களும்

மொத்த குடும்பத்துக்குமே இது ஒரு அழுத்தம் தரக்கூடிய நேரம். இந்தச் சூழலை உங்கள் குழந்தைகளோடு எவ்வாறு கையாள்வது என்பதற்கான சில உதவிக்குறிப்புகள் இதோ:

குடும்ப கலந்துரையாடல்களை ஒரு வசதியான இடத்தில் நடத்தி குடும்ப உறுப்பினர்களை கேள்விகள் கேட்க ஊக்குவிக்கவும். சிறு குழந்தைகளிடம் அவர்கள் புரிந்துகொள்ளக்க்கூடிய மொழியைப் பயன்படுத்துவதற்காகவும் அவர்களது பயங்களையும் தவறான எண்ணங்களையும் களையவும் ஒரு தனிப்பட்ட கலந்துரையாடலை நடத்துவது குறித்து யோசிக்கவும்.

அவ்வப்போதைய தகவல்களை நீங்கள் தெரிந்துவைத்திருக்க வேண்டுமெனினும், பயம் அல்லது பீதியைத் தூண்டும் ஊடகங்கள் அல்லது சமூக ஊடகங்களிடமிருந்து தொடர்பைக் குறைத்துக்கொள்ளுங்கள். தீவிர தொற்று குறித்தவைக்கு எந்தளவு ஊடக உள்ளடக்கம் அல்லது சமூக ஊடக நேரத்தின் மூலம் உங்கள் குழந்தைகள் ஆளாகிறார்கள் என்பது பற்றி விழிப்பு (மற்றும் வரையறுத்தலும்) கொண்டிருங்கள்.

குழந்தைகளை கேள்விகள் கேட்க ஊக்குவித்தும் தற்போதைய சூழ்நிலையை குழந்தைகள் புரிந்துகொள்ள உதவியும் அவர்களுக்கு ஆதரவளிப்பதில் கவனம்செலுத்தவும்.

 • அவர்கள் உணர்வுகள் குறித்து பேசச்சொல்லி அவற்றை உறுதிசெய்யவும்.
 • வரைதல் அல்லது பிற நடவடிக்கைகள் மூலம் அவர்களது உணர்வுகளை வெளிப்படுத்த உதவுங்கள்.
 • வைரஸ் எவ்வாறு பரவுகிறது என்பது பற்றிய தவறான தகவல் அல்லது தவறான புரிதல்களை தெளிவுபடுத்தி எல்லா சுவாச நோய்களும் COVID-19 ஏற்படுத்தக்கூடிய நாவல் கொரோனாவைரஸ் அல்ல என்பதையும் விளக்கவும்.
 • ஆறுதலும் கூடுதல் பொறுமையையும் வழங்குங்கள்.
 • சீரான இடைவெளிகளில் அல்லது சூழ்நிலை மாற்றங்களின்போது உங்கள் குழந்தையை மீண்டும் சோதித்துக்கொள்ளுங்கள்.
 • உங்கள் குடும்பத்தின் படுக்கும் நேரம், உணவு நேரம் மற்றும் உடற்பயிற்சி போன்ற திட்டமிட்ட செயல்பாடுகளை சீராக வைத்திருங்கள்.
 • வேறு அழுத்தமூட்டும் சூழல்களில் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் நன்றாக உணரச்செய்த வாசித்தல், திரைப்படங்கள் பார்த்தல், இசை கேட்டல், கேம்ஸ் விளையாடுதல், உடற்பயிற்சி அல்லது மத நடவடிக்கைகளில் ஈடுபடுதல் (பிரார்த்தனை, இணையவழியில் சேவைகளில் பங்கேற்றல்) போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்.
 • தீவிர தொற்று போன்ற அழுத்தமூட்டும் சூழலின்போது தனிமையுணர்வு, சலிப்பு, நோயால் பாதிக்கப்படுவோமோ என்ற பயம், தவிப்பு, அழுத்தம் மற்றும் பீதி போன்ற உணர்வுகளை இயல்பான எதிர்வினைகளாக அடையாளம் காணுதல்.
 • உங்கள் குடும்பத்துடன் அர்த்தமுள்ள செயல்பாடுகளிலும் கேளிக்கைகளிலும் சமூக மதிப்புள்ளவைகளிலும் ஈடுபடுத்திக்கொள்ள உதவுங்கள்.
கூடுதல் வாய்ப்பு வளங்கள் மற்றும் தகவல்கள்

Washington State Commission on Asian Pacific American Affairs (CAPAA)